search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி டேர் டெவில்ஸ்"

    டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்சை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvMI
    ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா, பும்ரா, மயங்க் மார்க்கண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர்.



    எவின் லெவிஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி 31 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பென் கட்டிங் 20 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் போராடி 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை எடுத்து 11 ரன்களில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

    டெல்லி அணி சார்பில் லாமிச்சென், ஹர்ஷர் படேல், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvMI
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லி டேர் டெவில்சை சந்திக்கிறது.#IPL2018 #DDvCSK #DD #CSK
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.

    டோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை எட்டிவிட்ட சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தை உறுதி செய்துவிடும்.

    அம்பத்தி ராயுடு (சதம் உள்பட 535 ரன்), ஷேன் வாட்சன் (சதம் உள்பட 424 ரன்), கேப்டன் டோனி (3 அரைசதத்துடன் 413 ரன்), சுரேஷ் ரெய்னா (3 அரைசதத்துடன் 315 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகிறார்கள். பேட்டிங் தான் சென்னை அணியின் பிரதான பலமாக இருக்கிறது.

    பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (11 விக்கெட்), வெய்ன் பிராவோ (9 விக்கெட்), தீபக் சாஹர் (7 விக்கெட்) ஆகியோர் ஓரளவு கைகொடுக்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் (தலா 7 விக்கெட்) இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை எளிதில் சேசிங் செய்த சென்னை அணி 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் 9-வது வெற்றியை நோக்கி களம் இறங்க காத்திருக்கிறது.

    ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது. 3 வெற்றி, 9 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. ஆனாலும் அந்த அணி வீரர்கள் தொடரை உயர்ந்த நிலையில் முடிக்க விரும்புவார்கள். அதுவும் உள்ளூரில் ஆடுவதால் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டுவார்கள்.

    டெல்லி அணிக்கு பேட்டிங் வரிசை வலுவாகவே காணப்படுகிறது. நடப்பு தொடரில் அந்த அணி 6 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறது. ரிஷாப் பான்ட் (582 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (386 ரன்), பிரித்வி ஷா (216 ரன்) ஆகியோர் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (15 விக்கெட்) தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை. இதே போல் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் (10 ஆட்டத்தில் 142 ரன்) ஜொலிக்காதது டெல்லிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி அல்லது நிகிடி, ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

    டெல்லி: பிரித்வி ஷா, ஜாசன் ராய், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், அமித் மிஸ்ரா அல்லது ஷபாஸ் நதீம், சந்தீப் லாமிச்சன்னே, ஜூனியர் டாலா, டிரென்ட் பவுல்ட்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #IPL2018 #DDvCSK #DD #CSK 
    விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #DDvRCB
    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் பிரித்வி ஷாவும், ஜேசன் ராய் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், 6-வது வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன் எடுத்து அசத்தினார். விஜய் சங்கர் 21 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.



    பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், மொயின் அலி, மொகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 182 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேல், மொயின் அலி இறங்கினர். படேல் 6 ரன்னிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 18 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தது.

    அவர்களை தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், டி வில்லியர்சும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்தனர்.

    கோலி 40 பந்தில் 70 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மந்தீப் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் கான் 11 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பெங்களூர் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன் எடுத்தார்.

    டெல்லி அணி சார்பில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும், லாமிச்சென், ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvRCB
    ×